டெல்லி:சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு! - சிவில் சர்வீஸ் நேர்முக தேர்வுகள் ஒத்திவைப்பு
கரோனா தாக்கம் அதிகரித்துவருவதாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவிவருகிறது. இதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம், இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கரோனா இரண்டாம் அலையில் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்களும், சிறுவர்களும் அதிகமாக பாதிக்கப்படுவதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இச்சூழலில், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.