ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தின் அனுமன் நகர் பகுதியில் பணியிலிருந்த ராணுவ வீரர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை
திருமணமாகவிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை! - சிஐஎஸ்எஃப் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த வீரர் தற்கொலை
ஜெய்பூர்: பில்வாராவில் பணியிலிருந்த ராணுவ வீரர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்
வேலூரை சேர்ந்த ரஞ்சித், சிஐஎஸ்எஃப் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி, விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினார்.
இவருக்கு வரும் பிப்ரவரி 21 அன்று, திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ரஞ்சித் தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.