துபாயிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு முறைகேடாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டுசெல்லப்படுவதாக அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பணம் பறிமுதல் - விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்
டெல்லி: இந்திரா காந்தி விமான நிலையத்தில் 28 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல்செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 30) துபாயிலிருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான சுங்க இலாகா அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த முகமது ஃபரேட் என்பவரது உடைமைகளைச் சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக சவுதி அரேபியாவின் ரியால் பண நோட்டுகள் மறைத்து வைத்துக் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைக் கைப்பற்றி கணக்கீடு செய்ததில், இந்திய ரூபாய் மதிப்பின்படி 28 லட்ச ரூபாயைக் கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து முகமது ஃபரேட், அவரது கூட்டாளி ஆசிப் ஆகியோரை மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை (CISF) கைதுசெய்தது. இவர்கள் இருவரிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.