கரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை, எனவே தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் கரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. கரோனாவுக்கு எதிரான போரில் பல்வேறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி சமீபத்தில்தான் இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. தற்போது அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்படும் 4ஆவது தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.