தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூபாய் நோட்டுகளால் உருவான கிறிஸ்துமஸ் குடில்.. புதுவையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு!

Puducherry Christmas celebration: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் மோசடிகளை தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் ரூபாய் நோட்டுகளின் நகல்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரூபாய் நோட்டுகளின் நகல்களால் அலங்கரிக்கப்பட்ட கிருஸ்துமஸ் குடில்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 12:39 PM IST

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வு

புதுச்சேரி:அரியாங்குப்பம், உப்புக்கார விதியில் வசிப்பவர் சுந்தரராசு. இவர் ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் குடில் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 11 வது முறையாக இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வுவை மையமாக கொண்டு ரூபாய் நோட்டுகளின் நகல்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.

அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணிபுரியும் இவர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு விழிப்புணர்வு குடில் அமைப்பது வழக்கம். முன்னதாக, ஒரு கன செ.மீ கிறிஸ்துமஸ் குடில் அமைத்து ’அசிஸ்ட்’ உலக சாதனை விருது பெற்றார்.

கடந்த காலங்களில் காய்கறிகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில், பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மறு சூழற்சி விழிப்புணர்வை மூலம் பிளாஸ்டிக் பாட்டில்கலால் வடிவமைத்த கிறிஸ்துமஸ் குடில், மரம் வளர்போம் என்ற விழிப்புணர்வு மூலம் தேங்காய்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில், சிறு தானிய உணவு வகைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் 25 வகையான தானியங்களை கொண்டு வடிவமைத்த கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.

மேலும், மாணவர்கள் கற்றல் திறனை வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வின் மூலமாக, 700 புத்தகங்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில், அனைவரும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் 1000 துணி பைகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில், தடுப்பூசி போட்டு கெள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் பல்வேறு வகையான தின்பண்டங்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில், மாதிரி கரோனா தடுப்பூசி மருந்து ஊசிகளை கொண்டு வடிவமைத்து செய்யப்பட்ட குடில் மற்றும் பழைய கம்ப்யூட்டர் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் குடில்களை செய்துள்ளார்.

மக்களுக்கு விழிபுணர்வை ஏற்படுத்தும் வகையில், இவர் செய்த புதுவித முயற்சியைப் பாராட்டி உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம், இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இந்நிலையில், 11வது ஆண்டாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போற்றும் வகையில் தனது வீட்டில் ரூபாய் நோட்டுகளின் நகல்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.

இதில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில், ரூ. 2000, 500, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளின் நகல்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. பூ வடிவத்தில் ரூபாய் நேட்டுகளை மடக்கி குடில் தொழுவமாகவும், 50 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நேட்டுகளை மரமாகவும் செய்யப்பட்டுள்ளது. நிலப்பகுதிகளை பல்வேறு வகையான ரூபாய் நேட்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பண மோசடி ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

தற்போதைய கிறிஸ்துமஸ் குடியிலில் பல்வேறு வகையான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்களான BHIM, போன் பே( PhonePe), Paytm, Google Pay, PayPal, Amazon Pay, MyJio, Kotak811 போன்ற நிறுவன செயலி குறியீடுகள் குடிலில் வைக்கப்பட்டு உள்ளன. பணம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் மோசடி செய்யப்பட்டு இருந்தால் புதுச்சேரி சைபர் கிரைம் இலவச எண் 1930 மற்றும் மின் அஞ்சல் முகவரி போன்ற விபரம் கொண்டு குடில் மற்ற பகுதிகளை அழகுப் படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைய தலைமுறைக்கு ஏற்றார்போல் கையில் செல்போன், கியூ.ஆர்.கோடுகளை பயன்படுத்தி தன் வங்கி கணக்கு பணம் மற்றுவது போல் தத்துரூபமாக செய்துள்ளனார். இந்தியாவில் அனைத்தும் டிஜிட்டல் மையமாக திகழும் இச்சூழலில் மக்கள் அவற்வறை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் இந்த கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடிலை இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என அனைத்து மதத்தை சார்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ஆசிரியர் சுந்தரராசு மற்றும் அவரது குடும்பத்தினரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:உச்சம் தொட்ட முட்டை விலை.. 50 ஆண்டுகால வரலாறு காணாத உயர்வுக்கு காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details