தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தக்காளி விற்று 3 கோடி ரூபாய் வருமானம் - சித்தூர் விவசாயியின் சிறப்பான சிந்தனை! - கோலார் மார்க்கெட்

காடுகள் வளர்ப்பு முறையில் சாஹூ ரக தக்காளி செடிகளைப் பயிரிட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி குடும்பம் ஒன்று ஒரே மாதத்தில் 3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 25, 2023, 9:56 PM IST

அமராவதி (ஆந்திரா): நாட்டில் தக்காளி விலை விண்ணை முட்டும் நிலையில் ஒருபுறம், சாமானியர்களின் பாக்கெட்டை கிழித்துக் கொண்டிருக்கும் விலைச் சுமை மறுபுறம், எதிர்பாராத விலையால் சில இடைத்தரகர்களின் பாக்கெட் நிரப்பப்படுகிறது. தக்காளி அதிகம் பயிரிடப்படும் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி குடும்பம் ஒன்று ஒரே மாதத்தில் 3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

சித்தூர் மாவட்டம், சோமலா மண்டலம், கரகமந்தா கிராமத்தைச் சேர்ந்த சந்திரமௌலி, அவரது தம்பி முரளி மற்றும் அவரது தாயார் ராஜம்மா ஆகியோர் கூட்டாக விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது சொந்த ஊரான கரகமந்தாவில் 12 ஏக்கர் பண்ணையும் மற்றும் புலிச்சேர்ல மண்டலம் சுவ்வரபுவாரிபள்ளேயில் 20 ஏக்கர் பண்ணையும் இவர்களது குடும்பத்திற்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலங்களில் இவர்கள் குடும்பம் தக்காளியை பல ஆண்டுகளாக பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரமௌலி நவீன விவசாய முறைகள், புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதலில் உள்ள நவீன உத்திகள் ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, கோடைக்குப் பின் விளையும் பயிருக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளார்.

இதன் வெளிப்பாடாக, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விளைச்சல் பெறும் வகையில் ஏப்ரல் மாதம் 7ம் தேதி சாஹூ ரக தக்காளி செடிகளை 22 ஏக்கரில் பயிரிட்டுள்ளார். மேலும் இந்தச் செடிகளை, காடுகள் வளர்ப்பு முறையில் தழைக்கூளம் (Mulching) மற்றும் நுண்ணீர் பாசனம் (micro-irrigation) முறைகளைப் பின்பற்றி விவசாயம் செய்துள்ளார்.

இதன் விளைவாக ஜூன் மாத இறுதியில் நல்ல செழிப்பான விளைச்சல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து விளைந்த தக்காளியை கர்நாடகா அருகில் உள்ள கோலார் மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளார். கோலார் மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட ஒரு தக்காளிப் பெட்டியின் விலை ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விவசாயி சந்திரமௌலி கூற்றுகையில், "இதுவரை 40 ஆயிரம் தக்காளிப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டு சுமார் ரூ.4 கோடி வரையில் வருவாய் கிடைத்துள்ளது. ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வீதம் முதலீடு 22 ஏக்கருக்கு ரூ.70 லட்சம், சந்தையில் கமிஷன் ரூ.20 லட்சம், போக்குவரத்து செலவு ரூ.10 லட்சம் என செலவுகள் அனைத்தையும் கழித்தது போக வருமானம் ரூ.3 கோடி கிடைத்துள்ளது" என மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதையும் படிங்க:Periyakulam:காலாவதி தேதியில்லாத உணவுப்பொருட்கள் பறிமுதல்; தேனியில் தொடரும் ரெய்டு

ABOUT THE AUTHOR

...view details