டெல்லியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை விட்டு அவரது மகனும், மக்களவை உறுப்பினருமான சிராக் பாஸ்வான் நேற்று (மார்ச் 30) வெளியேறினார். ஜன்பத் சாலையில் அமைந்துள்ள இந்த பங்களாவை காலி செய்யக்கோரி கட்நத ஆண்டு மத்திய வீட்டு வாரியத்தின் கீழ் இயங்கும் அரசு பங்களா இயக்ககம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
தந்தைக்காக ஒதுக்கப்பட்ட அரசு பங்களா - வெளியேறிய சிராக் பாஸ்வான் - மக்களவை உறுப்பினர் சிராக் பாஸ்வான்
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்னுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் இருந்து அவரது மகன் வெளியேறினார்.
அரசு பங்காளாவை காலி செய்த சிராக் பாஸ்வான்
அதாவது பாஜக அரசில் கூட்டணியில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு ஒதுக்கப்பட்ட பங்களா என்பதால், அதில் மக்களவை உறுப்பினர் சிராக் வசிக்கக் கூடாது எனபதற்காக அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (மார்ச் 30) பங்களாவில் இருந்து அவர் வெளியேறினார். இதையடுத்து அங்கிருந்த பொருள்கள் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.