அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிடோ(Zido) கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் மிரம் டரோன் என்பவரை சீன ராணுவம் வலுக்கட்டாயமாக பிடித்துவைத்துள்ளது.
இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்து இந்த செயலை சீனா மேற்கொண்டதாக அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் டபிர் காவோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 18ஆம் தேதி (ஜன. 18) அப்பகுதியைச் சேர்ந்த லுங்டா ஜோர் என்ற பகுதியில் இளைஞரை சீன ராணுவம் பிடித்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த இளைஞருடன் சென்ற அவரது நண்பர் சீன ராணுவத்திடமிருந்து தப்பி வந்து தகவல் தெரிவித்துள்ளார்.
பிடிபட்ட இளைஞரை அரசு விரைந்து மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என எம்.பி. டபிர் காவோ வேண்டுகோள்விடுத்துள்ளார். இந்திய எல்லைப் பகுதிக்குள் 3-4 கிமீ தூரத்திற்கு சீனா சாலைகள் அமைத்துள்ளது.
இதையும் படிங்க:மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக