தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீன தொழிலதிபர்கள் தங்கும் விடுதியில் தாக்குதல்... காபூலில் பரபரப்பு - China business visitors hotel blast

சீன தொழிலதிபர்கள் வாடிக்கையாக தங்கும் நட்சத்திர விடுதியில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காபூல்
காபூல்

By

Published : Dec 12, 2022, 7:48 PM IST

காபூல் நட்சத்திர விடுதியில் குண்டு வெடிப்பு

காபூல்(ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நட்சத்திர விடுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் விடுதியில் புகுந்து குண்டு வெடிப்பு நடத்தியதாகவும், சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திடீர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

குண்டுவெடிப்பு நடந்த நட்சத்திர விடுதியில் சீன தொழிலதிபர்கள் தங்குவதை வாடிக்கையாக கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தொழிலதிபர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெடிகுண்டு தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், உயிரிழப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க:மீண்டும் அமலுக்கு வந்தது ட்விட்டர் "ப்ளூ டிக்"; ட்வீட்களின் எழுத்து வரம்பு அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details