டெல்லி:டெல்லி-மீரட் திட்டத்தின் கீழ், புதிய அசோக் நகர் முதல் ஷஹிபாபாத் இடையே 5.6 கிலோமீட்டர் தூரம் வரை நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு, தேசிய தலைநகர் பிராந்தியப் போக்குவரத்து கழகம் (NCRTC) சீனாவைச் சேர்ந்த ஷாங்காய் டன்னல் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் புரிந்துள்ளது. இதன் மூலம் டெல்லியிலிருந்து சாலை வழியாக மீரட் செல்வதற்கான பயண நேரம் நேரம், மூன்று மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு குறைவாக குறையும்.
அனைத்து நெறிமுறைகள், வழிமுறைகளைப் பின்பற்றியே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக, நாட்டின் முதல் பிராந்திய அதிவேக ரயில் சேவைக்கானப் பணியை மேற்கொண்டு வரும் தேசிய தலைநகர் பிராந்தியப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.