தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தை இன்று தொடங்கிவைத்த குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டிராகன் பழத்திற்கு அப்பெயர் பொருத்தமானதாக இல்லை, இந்தப் பழம் பார்ப்பதற்கு தாமாரை போன்று இருப்பதால் இனிமேல் இப்பழத்தின் பெயரை 'கமலம்' என்று மாற்றியுள்ளோம் என்றார். (சமஸ்கிருதத்தில் கமலம் என்றால் தமிழில் தாமரை என்று பொருள்)
தொடர்ந்து பேசிய அவர், இந்த முடிவிற்கு பின்னால் அரசியல் ஏதும் இல்லை என்று கூறினார். இதனையடுத்து குஜராத் அரசு கமலம் என்ற பெயரை இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் முன்மொழிந்துள்ளது.