தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீன ராணுவத்திடமிருந்து சிறுவனை மீட்க நடவடிக்கை! - கர்னல் ஹர்ஷவர்தன் பாண்டே

எல்லைப் பகுதியில் காணாமல் போன அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மிராம் தரோம், தங்கள் வசம் இருப்பதாக சீன ராணுவத்தினர் தகவல் தெரிவித்ததையடுத்து, சிறுவனை மீட்கும் பணியை இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Chinese Army found missing boy from Arunachal
அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன சிறுவன்

By

Published : Jan 23, 2022, 8:20 PM IST

டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் எல்லைப் பகுதி அருகே காணாமல் போன 17 வயது சிறுவன் மிராம் தரோம் சீன ராணுவத்தின் வசம் உள்ளார்.

இவரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர், “அருணாச்சலப் பிரதேசத்தில் மாயமான சிறுவன், சீன ராணுவம் வசம் உள்ளார். அவரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக சிறுவனை சீன ராணுவம் அத்துமீறி கடத்தியதாக புகார்கள் எழுந்தன. இதற்கிடையில் சிறுவன் எல்லை தாண்டி சென்றது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Punjab Polls: பஞ்சாப் தேர்தலில் அமரீந்தர் சிங் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details