பெய்ஜிங் (Beijing):சீனாவில் இருந்து பரவியதாகக் கருதப்படும் கரோனா தொற்றிலிருந்து இன்னும் உலகம் விடுபடவில்லை. இந்த நிலையில், தற்போது உலகின் முதல் முதலாகப் பறவைக் காய்ச்சல் தொற்று சீனாவிலுள்ள ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளச் சம்பவம் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.
சீனாவின், ஜென்ஜியாங் (Zhenjiang) நகரத்தைச் சேர்ந்த 41 வயதான நபருக்கு 'H10N3' பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நட்டின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஜூன்.1) தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜென்ஜியாங் நகரத்தைச் சேர்ந்த அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளதாக, ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்கு ஜியாங்சு (Zhenjiang) மாகாணத்தில் இருந்து H10N3 பறவைக் காய்ச்சலால், உலகின் முதல் மனித நோய்த்தொற்று ஏற்பட்டதாக, சீனா அரசு தெரிவித்துள்ளது. பறவைக் காய்ச்சல் பரவல் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றும், இந்தத் தொற்று கோழிகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ் என்றும், இது பெருந்தொற்றாக மாறும் அபாயம் மிகக் குறைவு என்றும் சீன சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.