தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

India-China border: கிழக்கு லடாக்கில் அதிபர் ஸி ஜின்பிங் திடீர் ஆய்வு.. வீரர்களுடன் உரையாடல்! - இந்தியா சீனா ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள சீன துருப்புகளை அதிபர் ஸி ஜின்பிங் ஆய்வு செய்து ராணுவ வீரர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜின்பிங்
ஜின்பிங்

By

Published : Jan 20, 2023, 10:51 PM IST

பீஜிங்:இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலம், தங்கள் நாட்டிற்குச் சொந்தமானது என சீனா கூறி வருகிறது. மேலும் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் செல்போன் டவர் அமைப்பது, கிராமங்களை உருவாக்குவது உள்ளிட்டப் பல்வேறு அழிச்சாட்டியங்களை செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு எல்லை பிரச்னை தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வரை கொல்லப்பட்டனர். அதேநேரம் சீனா தரப்பில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 17 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தவாங் செக்டர் பகுதியில் இந்திய - சீனா வீரர்களிடையே மீண்டும் கைகலப்பு ஏற்பட்டது. இந்தியா- சீன ராணுவ வீரர்கள் மோதல் நாடாளுமன்றத்தில் பெரும் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள இந்தியா - சீனா எல்லை அருகே உள்ள சீன ராணுவத்தின் படை திரட்டல் தயார் நிலையை காணொலி காட்சி மூலம் அதிபர் ஸி ஜின்பிங் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சீன வீரர்களுடன் உரையாற்றிய ஜின்பிங் எல்லை பாதுகாப்பு, நிர்வாகப் பணிகள் குறித்து கேட்டறிந்ததாகவும், வீரர்களின் எல்லைப் பாதுகாப்பை பாராட்டி தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட ஊக்கமளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Google layoff : கூகுளில் 12 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் - சுந்தர் பிச்சை அதிரடி நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details