கடந்த ஓராண்டு காலமாகவே, இந்தியா - சீன நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, அமைதியை நிலைநாட்டும் வகையில் எல்லை பகுதிகளில் ராணுவப் படைகளை திரும்பபெற இரு நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இருப்பினும், லடாக் எல்லைக்கு அருகே டெப்சாங் பகுதியில் சீன ராணுவப் படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
'இந்தியாவை அச்சுறுத்தும் சீனாவின் சைபர் படைகள்' - ராகுல் ட்வீட் - இந்திய எல்லையில் சீனாவின் சைபர் படைகள்
டெல்லி: இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் சீனா, சைபர், ராணுவப் படைகளை அணி திரட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இரவு நேர சாட்டிலைட் புகைப்படங்கள் கொண்ட செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் சைபர், ராணுவப் படைகளை சீனா அணி திரட்டியுள்ளதால் இந்திய அரசு, நிலை தடுமாறியுள்ளது.
குறித்து கொள்ளுங்கள், டெப்சாங் பகுதியில் உள்ள நமது நிலம் பறிக்கப்பட்டுள்ளது. டிபிஓ (DPO) பகுதி அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இந்திய அரசின் கோழைத்தனம் வரும் காலங்களில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தவுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.