தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலகிலேயே மிக நீளமான மூவர்ணக்கொடி - கெஜ்ரிவால் மக்களுக்கு அழைப்பு

டெல்லியில் உலகிலேயே மிக நீண்ட மூவர்ணக் கொடியை பள்ளி குழந்தைகள் காட்சிப்படுத்த உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

By

Published : Jul 29, 2022, 1:16 PM IST

உலகிலேயே மிக நீளமான மூவர்ணக்கொடி டெல்லியில் காட்சி - கெஜ்ரிவால் மக்களுக்கு அழைப்பு
உலகிலேயே மிக நீளமான மூவர்ணக்கொடி டெல்லியில் காட்சி - கெஜ்ரிவால் மக்களுக்கு அழைப்பு

டெல்லி:இந்தியாவில் சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான குழந்தைகளால் உலகிலேயே மிக நீளமான மூவர்ணக் கொடி காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூலை 29) ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் பேசுகையில், ‘இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து விட்டது. நாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. கடவுள் இந்தியாவிற்கு அனைத்தையும் வழங்கியுள்ளார். ஆறுகள், மலைகள், மூலிகைகள் மற்றும் பயிர்கள் என அனைத்தையும் வழங்கியுள்ளார். இந்தியாவில் அதிக புத்திசாலியான மக்களும் உள்ளனர். இருப்பினும் நாம் ஏன் மற்றவர்கள் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறோம்’ என கேள்வி எழுப்பினார்.

மேலும், சிலர் என்னிடம் கேட்கிறார்கள் இந்தியாவால் உலகில் முதன்மையாக முடியாதா? என்று, இதற்கு நான் எப்படி பதில் அளிப்பேன்? நான் இப்போது உங்கள் எல்லோரிடமும் கேட்கிறேன், என்ன நினைக்கிறீர்கள்? ஏன் இந்தியாவை உலகில் சிறந்த நாடாக கொண்டு வர முடியவில்லை? என கூறினார்.

இதனையடுத்து 130 கோடி இந்தியர்களையும் முன்னே வந்து இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல உறுதி மொழி ஏற்குமாறும் கூறினார். தொழிலதிபர்கள், விவசாயிகள், பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:குஜராத் புறப்பட்ட மோடி - வழி அனுப்பி வைத்த ஸ்டாலின், ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details