திருவனந்தபுரம்:கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பிறப்பு சான்றிதழிலிருந்து தந்தையின் பெயரை நீக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதோடு, திருமணமாகாத தனது தாயின் பெயரை மட்டுமே அனைத்து சான்றிதழ்களிலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் அமர்வில் இன்று (ஜூலை 25) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இளைஞர்களின் சுதந்திரம், தனியுரிமை, கண்ணியம் ஆகியவற்றை யாராலும் மறுக்க முடியாது. திருமணமாகாத தாய்மார்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டவர்களின் குழந்தைகளும் இந்த நாட்டின் குடிமக்களே. அரசியலமைப்புச் சட்டம் இவர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை யாராலும் மறுக்க முடியாது.