டெல்லி: கேரளாவில் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதிவரை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கேரளாவில் கரோனா பரவல் அதிகமானதைத் தொடர்ந்து, தேர்வுகளை நிறுத்திவைக்க உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்று அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.
கேரளாவில் 11ஆம் வகுப்பு தேர்வுகளை நிறுத்திவைக்க உத்தரவு - covid in Kerala
கேரளாவில் 11ஆம் வகுப்புத் தேர்வை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.
![கேரளாவில் 11ஆம் வகுப்பு தேர்வுகளை நிறுத்திவைக்க உத்தரவு supreme court](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:48:48:1630689528-12959133-549-12959133-1630671174106.jpg)
supreme court
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனத் தெரிவித்துவிட்டது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11ஆம் வகுப்புத் தேர்வுகளை ஒரு வாரத்துக்கு நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.
10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்திக்காட்டியதாக மாநில அரசுத் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது. கரோனா பரவல் அதிகரித்துவரும் காரணத்தால், உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.