ஜார்க்கண்ட்:தன்பாத் மாவட்டம், தன்டுசர் பகுதியைச்சேர்ந்தவர் கூலித்தொழிலாளி, அசோக் ரெவனி. கபரிஸ்தான் பகுதியில் கூலி வேலை பார்த்து வந்தவர், பணி முடிந்ததும் தன் மனைவி, மகன் மற்றும் ஒரு மாத பெண் குழந்தையுடன் சாலையோரத்தில் படுத்து தூங்கியுள்ளார்.
சாலையோரம் பெற்றோருடன் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் கடத்திச்சென்றனர். சிறுமி கடத்தப்படுவது அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது போலீசார் புகாரை வாங்க மறுத்ததாகவும், சொந்த முயற்சியில் மகளை தேடிக்கொள்ளுமாறு கூறியதாகவும் அசோக் ரெவனி தெரிவித்துள்ளார்.