டெல்லி: இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வீடியோக்கள் அதிகம் கிளவுட் ஸ்டோரேஜ் (cloud storage) முறையில் பகிரப்படுவதாகவும், நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறார்களின் ஆபாசப் படங்கள் பகிரப்பட்டுள்ளதாகவும் இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை, சிபிஐக்கு தகவல் தெரிவித்தது.
இந்த தகவலின் அடிப்படையில், சிபிஐயில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து சிறார் ஆபாச வீடியோக்களை எடுத்தவர்கள், இணையத்தில் பகிர்ந்தவர்களை கண்டுபிடித்து, 21 மாநிலங்களில், 59 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், திண்டுக்கல் மாவட்டத்திலும் சிபிஐ சோதனை நடத்தியது.