ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள டாங்ரி கிராமத்தில் குடியிருப்பு வாசியின் வீட்டில் இன்று (ஜனவரி 2) குண்டுவெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு குழந்தை பலியாகியுள்ளது. 5 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினரும், போலீசாரும் சம்பவயிடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
டாங்ரி கிராமம் பாதுகாப்பு படையினருடைய கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த குண்டி வெடிப்பு பயங்கரவாதிகளின் தாக்குதலாகும். முதல்கட்ட தகவலில், IED(improvised explosive device) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு மேலும் ஒரு IED வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.