பானிபட் (ஹரியானா): பானிபட் மாவட்டத்தின் மட்லாடா காவல் நிலையப் பகுதியின் பால்சி கிராமத்தை சேர்ந்தவர் கோஷர். பால்சி கிராமத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக வசித்து வரும் இவர் அங்குள்ள சாயப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். காலையில், அவர் வேலைக்குச் சென்றிருந்தார், அவரது மனைவி நர்கீஸ் மற்றும் மூன்று குழந்தைகள் வீட்டில் இருந்தனர்.
ஹரியானா: விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு - சிறுவன் தூக்கில் தொங்கி பலி
ஹரியானாவில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் தவறுதலாக தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.
அங்கு அவரது மூத்த மகன் நாஜிம் ராஜா (13) விளையாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் குழந்தை திரும்பாததால், உறவினர்கள் தேடி வந்தனர். அதே நேரத்தில், நாஜிமின் இளைய சகோதரர் அவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்தார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:நிதியுதவியாக கொடுத்த காசோலைகள் பவுன்ஸ்.. காங்கிரஸ் பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு