தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோர்பி பாலம் இடிந்த வழக்கு - நகராட்சி நிர்வாகத்தலைமை அலுவலர் சஸ்பெண்ட்! - குஜராத் மாநில அரசு மீது குற்றச்சாட்டு

மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான வழக்கில், மோர்பி நகராட்சி நிர்வாக தலைமை அலுவலர் சந்தீப் சிங் சாலா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

chief
chief

By

Published : Nov 4, 2022, 4:53 PM IST

குஜராத்: குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி, மச்சு ஆற்றின் குறுக்கே இருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் மூழ்கினர். இந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பாலம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்ட 4 நாட்களில் இந்த விபத்து நடந்தது. 100 பேரை அனுமதிக்க வேண்டிய பாலத்தில், 400-க்கும் மேற்பட்டோரை அனுமதித்ததால், பாரம் தாங்காமல் பாலம் விழுந்ததாக கூறப்படுகிறது.

பாலம் சீரமைப்பு ஒப்பந்தத்தை, கட்டடத் தொழிலில் அனுபவம் இல்லாத ஒரேவா நிறுவனத்துக்கு மோர்பி நகராட்சிக்கு கொடுத்ததாகத்தெரிகிறது. இதுதொடர்பாக மோர்பி நகராட்சி மற்றும் குஜராத் மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இதுதொடர்பான வழக்கில், பாலத்தின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைப்பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், மோர்பி நகராட்சி நிர்வாக தலைமை அலுவலர் சந்தீப் சிங் சாலா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:மோர்பி தொங்கு பால விபத்துக்கு யார் காரணம்? - ஓர் பார்வை!

ABOUT THE AUTHOR

...view details