தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை!

நாட்டில் கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்வது குறித்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

Bipin Rawat
Bipin Rawat

By

Published : Apr 26, 2021, 5:35 PM IST

இந்தியாவில் கோவிட்-19 தொற்று தீவிரமடைந்துவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் கோவிட்-19 இரண்டாம் அலையை எதிர்கொள்வதில் ராணுவத்தின் பங்களிப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பல இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுபாடு நிலவும் சூழலில் தேவையான இடங்களுக்கு விமானப்படை மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுவருகிறது.

அத்துடன், பணியிலிருக்கும், ஓய்வுபெற்ற ராணுவ மருத்துவர்களை கோவிட் காலத்தில் பணியமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, பிபின் ராவத் பிரதமரிடம் தெரிவித்தார். மேலும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தேவைப்பட்டால் போர் கால அடிப்படையில் செயல்பட ராணுவம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் 14 நாள் ஊரடங்கு; பொது போக்குவரத்து முடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details