டெல்லி:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 28) காலை, சென்னையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்த அவர், கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.
கிண்டியில் பன்னோக்கு அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை என அதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அழைப்பை ஏற்று ஜூன் 5ம் தேதி சென்னை வர குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சம்மதம் தெரிவித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் சென்னை திரும்புவதற்காக பிற்பகல் 1.30 மணிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்குத் திரும்பினார்.