தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பல்வேறு கோரிக்கைகளை மீண்டும் பிரதமர் முன் வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் - Modi Stalin in delhi

நீட் விலக்கு, மேகதாது விவகாரம், காவிரி, புதிய கல்விக்கொள்கை போன்ற பல்வேறு கோரிக்கைகளை, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் முன் வைத்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை மீண்டும் பிரதமர் முன் வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
பல்வேறு கோரிக்கைகளை மீண்டும் பிரதமர் முன் வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Aug 17, 2022, 10:16 PM IST

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது மாமல்லபுரத்தில் நடைபெற்ற போட்டியினுடைய முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு நூலையும், தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறுதானிய மற்றும் நெல் வகைகளையும் நினைவு பரிசாக பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

பின்னர் நீட் விலக்கு, மேகதாது விவகாரம், காவிரி, புதிய கல்விக்கொள்கை போன்ற கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய நினைவு பரிசுகள்

அதேநேரம் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details