புதுச்சேரி:புதுச்சேரியில் மூர்த்திக்குப்பம், புதுகுப்பம், நரம்பை, பனித்திட்டு, நல்லவாடு ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மலட்டாறு முகத்துவாரத்தில் சிறிய துறைமுகம் ஒன்று கட்டித் தர வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கைவைத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் ரங்கசாமி நேற்று நல்லவாடு, பனித்திட்டு மீனவ கிராமங்களில் மலட்டாறு முகத்துவாரத்தில் சிறு துறைமுகம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டார்.