புதுச்சேரி: மகாத்மா காந்தியடிகளின் 74ஆவது நினைவு நாள், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடலில் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரியில் காந்தி சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை - அமைச்சர் லட்சுமி நாராயணன்
புதுச்சேரியில் காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி, துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் அண்ணல் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அமைச்சர் சாய் சரவணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. காந்தியின் புகழைப் போற்றும் வகையில் காந்தியக் கீர்த்தனைகளும் இசைக்கப்பட்டன.
இதையும் படிங்க: காந்தி நினைவுநாள் உறுதிமொழி - தடுத்து நிறுத்தப்பட்ட ஜி.ராமகிருஷ்ணன் - நடந்தது என்ன?