தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கட்டுமர அணிவகுப்பை தொடங்கி வைத்தார் புதுச்சேரி முதலமைச்சர் - 75ஆவது சுதந்திர தினம்

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கட்டுமர அணிவகுப்பை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரி முதலமைச்சர்

By

Published : Nov 6, 2021, 10:46 PM IST

புதுச்சேரி:நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலையின் பின்புறம் 75 இயந்திரம் பொருத்திய கட்டுமர அணிவகுப்பு இன்று(நவ.06) நடைபெற்றது.

இதனை முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் இலட்சுமி நாராயணன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், செயலர் நெடுஞ்செழியன், இயக்குநர் பாலாஜி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி முதலமைச்சர்

அணிவகுப்பில் பங்கேற்ற மீனவர்கள் தங்களது படகில் தேசியக் கொடியை ஏற்றி காந்தி சிலையில் அருகே கடலில் வளம் வந்தனர்.

இதையும் படிங்க:பொருளாதாரத்தை ரிவர்ஸ் கியர் போட்டு செலுத்தும் பிரதமர் - ராகுல் காந்தி காட்டம்

ABOUT THE AUTHOR

...view details