புதுச்சேரி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வரும் திங்களன்று கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் புதுச்சேரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற உள்ளது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வீட்டின் மாடியில் தேசிய கொடி ஏற்றிய முதலமைச்சர் - பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வீடுகளில் தேசிய கொடி ஏற்றக் கூறியிருந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது வீட்டின் மாடியில் தேசியக்கொடி ஏற்றினார்.
Etv Bharat வீட்டின் மாடியில் தேசிய கொடி ஏற்றிய புதுச்சேரி முதலமைச்சர்
இதனிடையே பிரதமர் மோடி வீடுகளில் தேசிய கொடி ஏற்றுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில்,புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திலாசுபேட்டையில் உள்ள தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி வைத்தும் அப்பகுதியில் உள்ள சிறுவர்களை வீட்டிற்கு அழைத்து இனிப்புகள் வழங்கியும் சுதந்திர தினத்தை வரவேற்றார்.
இதையும் படிங்க:சென்னை ஜார்ஜ் கோட்டையும்... முதல்முதலாக பறந்த தேசியக் கொடியும்...