புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியர்களை சந்தித்தார். அப்போது, “தற்போது நாட்டில் 9.5% பணவீக்கம் உள்ளது. உலகில் எந்த நாட்டிலேயும் இது போன்ற பணவீக்கம் கிடையாது. சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது காணொலி மூலம் மாணவர் பாடம் பயின்று வரும் நிலையில் மாணவர்களுக்கு என ஒரு திட்டத்தை அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் அறிவிக்கவில்லை, இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது அண்டை நாடாக உள்ள சீன நாடு 200 பில்லியன் டாலரை ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதியை தற்போது போடப்பட்டுள்ள பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. ராணுவத்தை நவீனப்படுத்தி இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை. வங்கிகளை தனியார் மையமாக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. சாதாரண மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்காது. அதனால் தனியார் மையமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.