அமராவதி (ஆந்திர பிரதேசம்): உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனத்திற்காக நேற்று (ஜூன் 10) மாலை திருப்பதிக்கு குடும்பத்துடன் வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா இன்று (ஜூன் 11) காலை ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி வழிபாட்டிற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, அவருடைய குடும்பத்தாருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குடும்பத்துடன் சாமி தரிசனம் ஏழுமலையானை வழிபட்ட தலைமை நீதிபதிக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்களும், ஏழுமலையான் படமும் பரிசாக வழங்கப்பட்டன.