டெல்லி:அண்டை நாடான நேபாளத்தில் வரும் 20ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் 275 உறுப்பினர்களுக்கும் 7 மாகாண சட்டமன்றங்களில் உள்ள 550 உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
நேபாள பொதுத் தேர்தலை பார்வையிட இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையிலான குழுவுக்கு நேபாள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
வரும் 18 ஆம் தேதி நேபாளம் செல்லும் இந்திய தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் குழுவின் தலைவராக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். ராஜீவ் குமார் தலைமையில் நேபாளம் செல்லும் இந்திய குழு 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நேபாள பொது தேர்தல் மற்றும் மாகாண தேர்தல் நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.