தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசி உற்பத்தி: மத்திய அரசை விளாசிய ப. சிதம்பரம்

”கோவாக்சின் தயாரிக்க, பிற தடுப்பூசி உற்பத்தியாளர்களை அழைக்க மத்திய அரசு தாமதப்படுத்தியதால் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள், உயிர் இழப்புகளுக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும்” என முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Chidambaram slams Centre for delay in inviting other COVAXIN manufacturers
தடுப்பூசி உற்பத்தி: மத்திய அரசை விளாசிய ப. சிதம்பரம்

By

Published : May 15, 2021, 5:28 PM IST

டெல்லி:முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பகிர்ந்துள்ள ட்வீட்டில், ”பிற தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு கட்டாய உரிமம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்திய நான்கு வாரங்களுக்குப் பின்பு, மத்திய அரசு கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய பிற தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இருப்பினும், இந்த தாமதமான நடவடிக்கையால் தவிர்த்திருக்கக்க வேண்டிய உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது... மத்திய அரசு தொடர்ச்சியாக மக்களிடம் பொய்களை கூறிவருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என பல்வேறு அறிக்கைகள் வெளியான பின்பு, நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.பவுல், கடந்த வியாழன் (மே.13) அன்று தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசும் பாரத் பயோடெக் நிறுவனமும் பிற தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ரெம்டெசிவிர் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்'- டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details