இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசின் தடுப்பூசி திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை குறைந்துவருவது ஏன்? கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஒரே நாளில் 42 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், நேற்று (மே.15) 11.60 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன.