ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து (Article 370) 2019 ஆகஸ்ட் 5 அன்று நீக்கப்பட்டது. அதன்படி மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. இதனிடையே சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு நேற்றுடன் (ஆகஸ்ட் 5) இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.
இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், ஒரு அரசியலமைப்பு சதி ஜம்மு - காஷ்மீரில் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயகத்தின் ஒவ்வொரு அம்சமும் இழிவுப்படுத்தப்பட்டது.