தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என்கவுன்ட்டரில் பெண் நக்சல் சுட்டுக் கொலை! - ஈடிவி செய்திகள்

சத்தீஸ்கரின் தாந்தேவாடா அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பெண் நக்சல் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

என்கவுண்டரில் பெண் நக்சல்  சுட்டுக் கொலை!
என்கவுண்டரில் பெண் நக்சல் சுட்டுக் கொலை!

By

Published : May 31, 2021, 5:05 PM IST

சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலறிந்த ரிசர்வ் காவலர் குழு பாதுகாப்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு பாதுகாப்புப் படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது. அதில், பெண் நக்சல் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அங்கு இருந்து, தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், இரண்டு கிலோ எடையுள்ள வெடிக்கும் சாதனம் போன்றவை (ஐ.இ.டி), பிற பொருட்கள், மருந்துகள் ஆகியவை என்கவுன்ட்டர் தளத்திலிருந்து மீட்கப்பட்டதாக காவல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: டெல்லி செல்ல மறுக்கும் மேற்கு வங்க தலைமைச் செயலாளர்!

ABOUT THE AUTHOR

...view details