ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநிலம், ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டம், பிஹ்ரித் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் சாஹூ (12) சிறுவன் ஜூன் 10ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்தான். 120 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில், சிறுவன் 50 அடியில் சிக்கியிருப்பதாக மீட்புக்குழு தெரிவித்தது.
சிறுவனை மீட்கும் பணியில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்களுடன், தீயணைப்பு துறை, காவல் துறை, சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. இந்த பணிகள் 5 நாளாக தொடர்ந்துவருகிறது. சிறுவனுக்கு குழாய்கள் மூலம் உணவு, தண்ணீர், ஆக்சிஜன் வழங்கப்பட்டுவருகிறது. அதோடு சிறுவன் சுயநினைவுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.