தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 குழந்தைகள் உயிரிழப்பு - வென்டிலேட்டர் மின்சாரம் குழந்தைகள் உயிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் வென்டிலேட்டருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

Power cut in neonatal ward kills four newborns in Chhattisgarh
Power cut in neonatal ward kills four newborns in Chhattisgarh

By

Published : Dec 5, 2022, 5:52 PM IST

ராய்பூர்:சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாவில் உள்ள அம்பிகாபூர் மருத்துவமனையில் 4 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார செயலாளர் ஆர்.பிரசன்னா கூறுகையில், அம்பிகாபூர் மருத்துவமனையின் குழந்தைகள் வார்ட்டில் இன்று(டிசம்பர் 5) காலை 10.30 மணியளவில் 4 குழந்தைகள் உயிரிழந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், அந்த மருத்துவமனைக்கு மருத்துவக் குழுவை அனுப்பி விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தினேன். இந்த விசாரணையில், குழந்தைகள் வார்டுக்கு செல்லும் மின்சாரம் 4 மணிநேரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பேட்டரி பேக்கப்பும் பழுதானதால், வென்டிலேட்டருக்கான மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அப்போது, செவிலியரும், ஊழியர்களும் வார்டில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையான விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் மூதாட்டியை நிர்வாணமாக்கி தாக்கிய கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details