ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள தன்னோட் கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக இரண்டு இளைஞர்கள் சொந்த தாய் மாமனை கொடூரமாக அடித்துக்கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (பிப்.3) சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜான்ஜ்கிர் சம்பா போலீசார் கூறுகையில், தன்னோட் கிராமத்தை சேர்ந்த கோல்பஹாரா சாஹு என்பவருக்கும் அவரது தங்கை மகன்களான உத்தம் பிரசாத் சாஹு மற்றும் சந்தோஷ் சாஹு ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்த தகராறு காரணமாக கோல்பஹாரா சாஹு பக்கத்து கிராமத்துக்கு சென்றுள்ளார். இவரது கையெழுத்து இல்லாததால் பூர்வீக நிலத்தை விற்பனை செய்ய முடியவில்லை. அதன் காரணமாக கோல்பஹாரா சாஹுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலத்தைப் பிரிக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில், நேற்று ஜான்ஜ்கிர் சம்பாவில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்து அனைவரும் புறப்பட்டனர். அந்த நேரத்தில், அலுவலகம் முன்பு மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரசாத் சாஹு மற்றும் சந்தோஷ் சாஹு இருவரும் கோல்பஹாரா சாஹுவை சரமாரியாக தாக்கினர்.