சத்தீஸ்கர்: நக்சல்களால் கடத்தப்பட்ட சிஆர்பிஎப் காவலர் விடுவிப்பு! - நக்சல்கள்
![சத்தீஸ்கர்: நக்சல்களால் கடத்தப்பட்ட சிஆர்பிஎப் காவலர் விடுவிப்பு! ABDUCTED CRPF JAWAN RAKESHWAR SINGH MANHAS RELEASED BY NAXALS](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11330745-199-11330745-1617889532828.jpg)
18:36 April 08
சத்தீஸ்கர்: ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற பிஜாபூர் நக்சல் தாக்குதலின்போது கடத்தப்பட்ட சிஆர்பிஎப் காவலர் விடுவிக்கப்பட்டார்.
ஏப்ரல் 3ஆம் தேதி சத்தீஸ்கரின் பிஜாபூரில் நக்சல்களுக்கும், சிஆர்பிஎப் காவலர்களுக்கும் இடையே கடுமையான தாக்குதல் நடைபெற்றது. இதில் 22 சிஆர்பிஎப் காவலர்களும், சில நக்சல்களும் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலின்போது கோப்ராவை (The Commando Battalion for Resolute Action) சேர்ந்த ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் என்ற காவலர் கடத்தப்பட்டார்.
சமீபத்தில் நக்சல் தலைவர் விகல்ப் வெளியிட்ட ராகேஷ்வர் சிங்கின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது ராகேஷ்வர் சிங்கை நக்சல்கள் விடுவித்துள்ளனர்.
இதுகுறித்து ராகேஷ்வர் மனைவி கூறுகையில், என் வாழ்நாளிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாள் இதுதான். அவர் நிச்சயம் வீடு திரும்புவார் என நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை என்றார்.