புதுச்சேரி:புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் திரும்பி இடங்கள் எல்லாம் மதுபான கடைகள் மற்றும் அனைத்து வகை வெளிநாட்டு மதுபானங்களும் இங்கு அதிகம் கிடைப்பதால் புதுச்சேரிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
புதுச்சேரி அரசு சுற்றுலா மூலம் மாநில வருவாயைப் பெருக்குவதற்கு பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களில் புதுச்சேரியில் 150-க்கும் மேற்பட்ட ரெஸ்ட்டோ பார்கள் நடந்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று பீர் பஸ்(Beer Bus) திட்டம் செயல்பட உள்ளது.
catamaran brewing co என்னும் தனியார் நிறுவனம் brew house tour என்ற பெயரில் இந்த பீர் பஸ் சுற்றுலாவை ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் பயணம் செய்வதற்காக தலா ஒரு நபருக்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த பீர் பஸ் பயண திட்டத்தில் சென்னையிலிருந்து பேருந்து மூலம் புதுச்சேரிக்குச் சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்படுவார்கள், அன்றைய தினமே மீண்டும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
மேலும் இந்த பயணத்தில் பேருந்தினுள் வைத்து பீர் குடிக்க அனுமதி இல்லை எனவும், புதுச்சேரி அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பீர் அருந்த அனுமதிக்கப்படும் என்று பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளை குஷிப்படுத்த சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வரும் 22ஆம் தேதி பீர் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பதிண்டா ராணுவ மையத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி!