தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இதயத்தில் சிக்கிய கீமோ போர்ட் - சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றம்! - வயிற்றுப் புற்றுநோய்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் இதயத்தில் சிக்கிய கீமோ போர்ட்டை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர்.

chemotherapy
chemotherapy

By

Published : Sep 22, 2022, 8:51 PM IST

ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள ஜஷ்பூரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதற்காக கிமோதெரபி சிகிச்சை செய்துள்ளார். இரண்டு முறை கீமோதெரபி செய்த பிறகு, மருத்துவர்கள் வழக்கம்போல் எக்ஸ்ரே செய்து பார்த்துள்ளனர்.

அப்போது இதயத்தில் ஏதோ சிக்கி இருப்பது தெரியவந்தது. இது கிமோதெரபியின் போது பயன்படுத்தப்படும் சிறிய கீமோ போர்ட் என்று கண்டுபிடித்த மருத்துவர்கள், உடனடியாக இளம்பெண்ணை ராய்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குள்ள அட்வான்ஸ் கார்டியாக் இன்ஸ்டிடியூட்டில் இளம்பெண் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இருதயவியல் துறை மருத்துவர்கள், இளம்பெண்ணுக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து, இதயத்தில் சிக்கியிருந்த கிமோ போர்ட்டை வெற்றிகரமாக அகற்றினர்.

லாஸ்ஸோ முறையில் கிமோ போர்ட் அகற்றப்பட்டதாகவும், நீண்ட முயற்சிக்குப் பிறகு இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உடல் பருமனால் அல்சைமர் நோய் ஏற்படுமா? - நிபுணர்கள் கவலை!

ABOUT THE AUTHOR

...view details