கர்நாடக மாநிலம், பெங்களூரு வடக்கு தாலுகாவின் தொட்டடகுடஹள்ளி, ஆச்சார்யா கல்லூரி சாலையில் ஜே கிச்சன் மற்றும் பி.ஜி.ஜே கிச்சன் உணவகம் இயங்கி வருகிறது. இந்த ஜே கிச்சனின் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்த ஜி.ஜி.யுஹான். இங்கு, சாஜி (வயது 46) என்பவர் சமயல் வேலை செய்து வருகிறார்.
ஜி.ஜி.யுஹான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாஜியை தனது உணவகத்தில் சமையல்காரராக வேலைக்கு சேர்த்துள்ளார். முதலில், சமையல்காரருக்கும் உரிமையாளருக்கும் நல்ல உறவு இருந்து வந்துள்ளது. ஆனால், கரோனா காலத்திற்குப் பிறகு, இருவருக்குமிடையே சம்பளப் பிரச்னை காரணமாக தகராறு ஏற்படத் தொடங்கியுள்ளது.
கரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்ததால், ஹோட்டல் இயங்காத நிலையில் சாஜிக்கு சம்பளம் வழங்க முடியாது என உரிமையாளர் ஜி.ஜி.யுஹான் கூறியுள்ளார். இதனால், ஊரடங்கு அமலில் இருந்த மாதங்களைத் தவிர மீதமுள்ள ஒன்பது மாதங்களுக்குண்டான சம்பளத்தை சாஜி கேட்டுள்ளார். இதில், இருவருக்குமிடையே தகராறு முற்றியுள்ளது.