லண்டனில் நவம்பர் 5ஆம் தேதி உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சி-2021 நடைபெறுகிறது. இந்த நிகிழ்ச்சியின் போது செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
உலகத் தமிழ் அமைப்பால் (WTO-UK) நிறுவப்பட்ட இந்த விருது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமர்ன்ல் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் முதல் விருது இதுவாகும். இந்த விருதை பெறுவதற்கு பெருமிதம் கொள்வதாக தாமு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தாமு கூறுகையில், " என்னுடைய பல ஆண்டுகள் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை நான் பார்க்கிறேன். இந்த பிரிவில் முதல் விருதை பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய தருணம் ஆகும். இந்த விருது இளம் சமையல் கலைஞர்களை ஊக்குவிக்கும்.
கடின உழைப்பால் நீங்கள் எந்த உயரத்தையும் எட்டிவிட முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.