போபால்:மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய உயிரியல் பூங்காவிற்கு, கடந்த மார்ச் மாதம் ஏழு சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்ட நிலையில், 4 மாதத்தில், நான்கு சிவிங்கிப்புலிகள் உயிரிழந்து விட்டன. சிவிங்கிப்புலிகளின் தொடர் மரணங்களைத் தொடர்ந்து, வனவிலங்கு வல்லுநர்கள் ஆப்பிரிக்க வாழ் சிவிங்கிப்புலிகளை கையாளும் விதம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த விலங்குகளைப் பராமரிப்பதில் அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்களை ஈடுபடுத்துமாறு அவர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.
குனோ தேசிய உயிரியல் பூங்காவில், தேஜஸ் என்று பெயரிடப்பட்ட ஆண் சிவிங்கிப்புலி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 11ஆம் தேதி) உயிரிழந்தது. சிவிங்கிப்புலிகள் "உள்ளுற பலவீனமானது". பெண் சிவிங்கிப்புலி உடனான சண்டைக்குப் பிறகு ஏற்பட்ட "அதிர்ச்சியில்" இருந்து மீள முடியவில்லை என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக, வனத்துறை அதிகாரி குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், தென்னாப்பிரிக்கா நாட்டில் இருந்து, மத்தியப் பிரதேச மாநிலம், ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட 7 சிவிங்கிப்புலிகளில், தற்போது நிகழ்ந்து உள்ள தேஜாஸின் மரணம், கடந்த ஆண்டு செப்டம்பரில் மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட மத்திய அரசின் , இந்தியாவில் சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு கிடைத்து உள்ள மற்றொரு பேரிடியாகும்.
இதன் மூலம், நமீபிய சிவிங்கிப்புலியான 'ஜ்வாலா'விற்கு பிறந்த 7 குட்டிகளில், மூன்று குட்டிகள் மார்ச் மாதத்திற்குள், இந்தப் பூங்காவில் உயிரிழந்துவிட்டன. டேராடூனைச் சேர்ந்த இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) முன்னாள் டீன் மற்றும் மூத்த தொழிலதிபர் ஒய்.வி. ஜாலா, PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது, ''இந்த மறுஅறிமுகத் திட்டத்தில் சிவிங்கிப்புலிகளின் மரணங்கள் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த இறப்புகள் எல்லாம் மூடப்பட்ட போமாக்களிலேயே நிகழ்ந்து உள்ளன, சிவிங்கிப்புலிகள் பாதுகாப்பான அடைப்பிலிருந்து விடுபட்ட பிறகு இறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிவிங்கிப்புலி தேஜஸின் சமீபத்திய மரணம், சண்டையால் நிகழ்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெண் சிவிங்கிப்புலி ஒரு ஆண் சிவிங்கிப்புலியைத் தாக்கி கொல்வது சிவிங்கிப்புலியின் எல்லையில் எங்கும் இதுவரை பதிவாகியதில்லை' என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
மூன்று சிவிங்கிப்புலி குட்டிகள் "சிறைபிடிக்கப்பட்டு" இறந்தது ஆச்சரியமாகவும், அவற்றை கையாளும் தன்மையில் கேள்வி எழுந்து உள்ளது. குட்டிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், அவற்றை ஆரோக்கியமாக மாற்ற கூடுதல் உணவுகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும், இந்த மரணங்கள், சிவிங்கிப்புலிகளின் மறு அறிமுகம் திட்டத்திற்கு "பெரிய இழப்பு" என்று ஜாலா தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் வெற்றிபெற, மத்திய அரசின் சரியான பட்ஜெட் ஒதுக்கீட்டுடன், குனோ போன்ற குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து தளங்கள் தேவைப்படுவதாக, ஜாலா குறிப்பிட்டு உள்ளார்.
"இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் மறு அறிமுகப்படுத்தும் திட்டத்தின் வெற்றிக்கு, குனோ பூங்காவில், சிவிங்கிப்புலிகள் உயிரிழந்த நிகழ்வை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. இந்த விவகாரத்தில, பிற தளங்களைத் தயார்படுத்துவது அவசரத் தேவை" என்று வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.