தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் தொங்கு சட்டசபை? ஆட்சியை பிடிப்பது காங்கிரசா? பாஜகவா? - 5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு

Election Exit Poll Results 2023: Five States Assembly Elections Exit Polls Result ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் விரிவாக பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 6:49 PM IST

Updated : Nov 30, 2023, 9:45 PM IST

சத்தீஸ்கர் :90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. கடந்த பல ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக சத்தீஸ்கரில் நக்சல் பாதிப்புகள் அதிகம் காணப்பட்ட இடங்களில் கூட இம்முறை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரை முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும், நாராயண சண்டல் தலைமையிலான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு பெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக பகுஜான் சமாஜ் கூட்டணி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 46):

பாஜககாங்கிரஸ்மற்றவை
CNN404703
janki Baat34 - 4542 - 5303
Axis my India414504
India Today36 - 4640 - 50---
TV930 - 4046 - 5603 - 05
Chanakya3357---

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. பல்வேறு கருத்து கணிப்புகளின் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கூட்டணி ஆட்சி நடத்த பாஜக திட்டமிடலாம் என நம்பப்படுகிறது. இதனால் உற்று நோக்க வேண்டிய இடத்தில் சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் உள்ளது.

இதையும் படிங்க :ஓய்ந்தது 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்.. ஆட்சியை இழக்கப் போவது யார்? கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!

Last Updated : Nov 30, 2023, 9:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details