ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் சார்மினார் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மும்தாஜ் அகமது கான். இவர் சனிக்கிழமை இரவு (டிசம்பர் 11) சார்மினார் பேருந்து நிலையம் அருகே காரில் சென்றுகொண்டிருந்தபோது உள்ளூர்வாசியான குலாம் கவுஸ் ஜிலானி என்பவர் அவர் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்.
இதைக் கண்ட எம்எல்ஏ உடனே காரிலிருந்து இறங்கிவந்து ஏன் எழுந்து நின்று மரியாதை கொடுக்கவில்லை எனக் கேட்டு இளைஞனை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்தக் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.