ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகரமான ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் கடந்த மே 28 அன்று 17 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக ஆறு பேரை ஜூன் மாதத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். ஆறு பேரில் ஒருவன் மட்டுமே 18 வயது நிரம்பியவன். எஞ்சிய 5 பேரும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.
கடந்த மே 28 அன்று இரவில் ஹைதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பப்பிற்கு விருந்திற்கு சென்ற அந்த 17 வயது சிறுமியை ஆறு பேரும் தங்களது வாகனத்தில் ஏற்றி வீட்டில் கொண்டு விடுவதாக கூறியுள்ளனர்.
இதனை நம்பி ஏறிய அந்த சிறுமியை ஆறு பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதில் ஒரு 17 வயது சிறுவன் மட்டும் தவறான செய்கைகளில் ஈடுபட்டதாகவும், வன்கொடுமை செய்யவில்லை எனவும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மைனர் குற்றவாளிகள் 5 பேரில் 4 பேருக்கு சிறார் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் மற்றவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும் 18 வயது நிரம்பியவன் சிறையில் அடைக்கப்பட்டான்.