லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் வழியாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சாரஸ் போதைபொருள் டெல்லிக்கு கடத்தப்பட உள்ளதாக காவல்துறைக்கு தகவல்கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், போதைபொருள் தடுப்புப்பிரிவு அலுவலர்கள் மற்றும் சதர் பஜார் காவலர்கள் ஷாஜஹான்பூர் பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஷாஜஹான்பூர் பேருந்து நிலையம் அருகே சோதனை செய்யப்பட்ட வாகனத்தில் 21.8 கிலோ சாரஸ் பாக்கெட்டுகள் சிக்கின.
உ.பி.யில் ரூ.43.80 கோடி மதிப்புள்ள சாரஸ் போதைபொருள் பறிமுதல் - சாரஸ் விலை
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் ரூ.43 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள சாரஸ் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த காவலர்கள், மூன்று பேரை கைது செய்தனர். காவல்துறையின் முதல்கட்ட தகவலில், நேபாளத்திலிருந்து மலிவு விலைக்கு பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதைப்பொருளான சாரஸை கொள்முதல் செய்து, அதனை உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் சிக்கியுள்ளது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 21.8 கிலோ சாரஸ் பாக்கெட்டுகள் ரூ.43 கோடியே 80 லட்சம் மதிப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:போதைப்பொருள் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் காலதாமத நடவடிக்கைக்குப் பாராட்டு